வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டதை எதிர்த்து நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.
தேர்தல் வழக்கில் பதிலளிக்க நடிகர் சங்கத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - நடிகர் சங்கம்
சென்னை: நடிகர் சங்க உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் இல்லை என்ற அரசு தரப்பு குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்தவும் உத்தரவிட்டார். மேலும் வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டார். விஷால் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளித்த பதிவாளர், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அலுவலரை நியமித்தது தேர்தல் நடத்த முடியாது என்றும், பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பதவியில் நீடிக்கக் கூடாது என்று தடை செய்ய எந்த சட்ட விதிகளும் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து, பதவிக்காலம் முடிந்த பின்னரும் தேர்தல் நடத்த நடிகர் சங்கத்துக்கு அதிகாரம் உள்ளதா? என பதிலளிக்கும் படி விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.