தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீரசண்முகமணி கைதில் மனித உரிமை மீறலா?- மனித உரிமைகள் ஆணையம் கேள்வி! - உயர்நீதி மன்றம்

சென்னை: இந்து அறநிலைய துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியை கைது செய்ததில் மனித உரிமைகள் மீறப்பட்டதா என்பது குறித்து பொன்மாணிக்கவேல் மற்றும் தமிழக டிஜிபி, 4 வாரத்தில் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வீரசண்முகமணி கைது விவகாரத்தில் மனித உரிமை மீறலா?- மனித உரிமை ஆணையம் கேள்வி!

By

Published : Apr 10, 2019, 7:51 PM IST

சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டதில் 8.7 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டதாக கடந்த மாதம் 15ம் தேதி இந்து சமய அறநிலைய துறையின் முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

விசாரணை முடிவில் வீரசண்முகமணியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் தன்னை கைது செய்வதற்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட நடைமுறையில் மனித உரிமை மீறல் இருப்பதாக கூறி தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வீரசண்முகமணி புகார் அளித்தார்.

அந்த புகாரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மற்றும் ஆய்வாளர் செந்தில்மாறன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

வீரசண்முகமணியின் இந்த புகாரை விசாரித்த, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை கைது செய்வதற்கான நடைமுறைகள் பின்பற்றபட்டதா? என்பது குறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தமிழக டிஜிபி, 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details