கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் கடந்த 2005 முதல் 2020-ஆம் ஆண்டு வரை உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
சட்டவிரோத குவாரிகள்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு தொழில் துறைச் செயலாளர் சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
குவாரி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டவிரோத குவாரிகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.