தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கீழமை நீதிமன்றங்களில் விசாரணை நடத்துவது குறித்து மாவட்ட நீதிபதிகள் முடிவெடுக்கலாம்’ - உயர் நீதிமன்றம் - மாவட்ட நீதிபதிகள்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் முழுமையாக நேரடி விசாரணை நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட நீதிபதிகள் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Feb 2, 2021, 9:05 AM IST

தமிழ்நாடு, புதுச்சேரியில் கரோனா தாக்கம் குறித்து ஆய்வுசெய்த சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு, கீழமை நீதிமன்றங்கள் அனைத்தும் வரும் பிப்ரவரி 8ஆம் தேதிமுதல் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் முழு அளவில் செயல்படலாம் என முடிவெடுத்து அறிவித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி. குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை நேடியாக நடத்துவதா அல்லது காணொலி மூலமாக நடத்துவதா என்பதை அந்தந்த மாவட்டத்தில் நிலவும் சூழலைக் கருத்தில்கொண்டு மாவட்ட முதன்மை நீதிபதிகள் முடிவு செய்துகொள்ளலாம் எனவும், கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல் கீழமை நீதிமன்றங்கள் செயல்படுவதை முதன்மை நீதிபதிகளும், மாவட்ட நீதிபதிகளும் உறுதிசெய்ய வேண்டுமென தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழமை நீதிமன்ற வளாகங்களிலுள்ள வழக்கறிஞர் சங்கங்கள், அறைகள், உணவகங்கள் செயல்பட அனுமதிப்பது குறித்து பிப்ரவரி 8ஆம் தேதியிலிருந்து மூன்று வாரம் கழித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குயின் வெப் தொடர்: ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை மீது களங்கம் - தீபா குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details