தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவருடன் செல்ல எம்எல்ஏ மனைவிக்கு நீதிமன்றம் அனுமதி...! - Chennai HC allows MLA prabhu Marriage

கணவருடன் செல்ல எம்எல்ஏ மனைவிக்கு நீதிமன்றம் அனுமதி...!
கணவருடன் செல்ல எம்எல்ஏ மனைவிக்கு நீதிமன்றம் அனுமதி...!

By

Published : Oct 9, 2020, 11:38 AM IST

Updated : Oct 9, 2020, 5:08 PM IST

11:35 October 09

சென்னை: காதல் கணவரும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏவுமான பிரபுவுடன் செல்ல செளந்தர்யா விருப்பம் தெரிவித்ததால் அவருடன் செல்ல அனுமதித்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியின் அதிமுக எம்எல்ஏ-வாக இருக்கும் பிரபுவும், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. திருச்செங்கோடு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சௌந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி திடீரென மாயமாகியுள்ளார்.

இந்நிலையில் அக்டோபர் 5ஆம் தேதி பிரபு - சௌந்தர்யா திருமணம் முடித்ததாக, அவர்களின் புகைப்படமும், சௌந்தர்யா வீட்டில் மறுத்ததால் வீட்டைவிட்டு வெளியேறி தன்னை முழுமனதுடன் திருமணம் செய்துகொண்டதாக பிரபு வீடியோ வெளியிட்டார். அதிமுக எம்எல்ஏ பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்துதான் தன் மகளை கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டு கடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி சுவாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை வாங்க மறுத்த காவல்துறை சுவாமிநாதனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ பிரபு ஆட்களால் மகள் கடத்தப்பட்டதாகவும், மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

அதில் படிக்கும் பெண்ணிடம் எம்எல்ஏ பிரபு ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி கடத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த மனுவை நேற்று (அக்.08) விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண்ணையும், அவரது தந்தையையும் இன்று (அக்.9) பிற்பகல் விசாரணையின் போது நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இவ்வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் இன்று (அக். 09) விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட பெண் செளந்தர்யா, அவரது தந்தை சுவாமிநாதன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்த நீதிபதிகள், சுவாமிநாதன், செளந்தர்யா ஆகிய இருவரும் பேசி தங்களது கருத்துக்களை தெரிவிக்க சற்று அவகாசமும் வழங்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வின் மனைவி செளந்தர்யா, தனது கணவர் பிரபுவுடன் செல்ல விரும்புவதாகவும், தந்தையுடன் செல்ல விருப்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தனது காதல் கணவரும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வுமான பிரபுவுடன் செளந்தர்யாவை செல்ல அனுமதித்து வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க...அதிமுக எம்எல்ஏவிடமிருந்து மகளை மீட்டுத்தர தந்தை ஆட்கொணர்வு மனு

Last Updated : Oct 9, 2020, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details