சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த மழையில் விளைபொருள்கள் மழையில் நனைந்து வீணானது குறித்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
மேலும், அதிகளவில் சாகுபடி நடக்கும் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் தொடங்குவது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத் துறைச் செயலாளர் தாக்கல்செய்த அறிக்கையில், "நெல் கொள்முதலுக்காக 468 குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மூன்று லட்சத்து 34 ஆயிரம் டன் நெல்லை பாதுகாக்க முடியும். அவை படிப்படியாக மேம்படுத்தப்படும்.