சென்னை, துறைமுகத் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ்.பி.செல்வம் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், “துறைமுகப் பகுதியில் 40 ஆண்டு காலம் மக்கள் பணியாற்றிய தங்கள் மீது நம்பிக்கை இருந்திருந்தால், திமுக வேட்பாளர் சேகர்பாபு என்னை குண்டர்களை வைத்து ஏன் எதிர்க்க வேண்டும்? தேர்தல் களத்தில் எங்களை மிரட்டாமல் நேர்மையாக தேர்தலை சந்திக்க வேண்டும். மக்கள் முடிவு எடுக்கட்டும்.
என்னை வெற்றிபெற வைத்தால் அடுத்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் தொகுதியாக துறைமுகத் தொகுதியை மாற்றிக் காட்டுவேன் என்று உறுதிமொழி எடுத்து உள்ளேன். திமுக, இத்தனை ஆண்டுகள் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதால்தான், இந்தப் பகுதிகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கிறது.