சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி நேற்று (டிச.15) சென்னை லீலா பேலஸில் தொடங்கியது. இந்த போட்டி வரும் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலக கிராண்ட் மாஸ்டர்ஸ் 8 பேர் கலந்து கொண்ட இந்த போட்டி 7 சுற்றுகள் கொண்டதாகும்.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி: 2வது சுற்றில் மூன்று ஆட்டங்கள் டிரா.. ! நேற்று (டிச.15) முதல் சுற்று முடிவடைந்த நிலையில், இன்று 2வது சுற்று நடைபெற்றது. இந்த போட்டியை செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கிராண்ட் மாஸ்டார்களான குகேஷ் மற்றும் அர்ஜூன் மோதிய அட்டம் டிராவில் முடிந்தது. இதேபோல் அலெக்சாண்டர் ஜுகோவ் - ஹரிகிருஷ்ணா மோதிக் கொண்ட போட்டியும், அரோனியன் லெவன் - பர்ஹாம் மக்சூட்லூ இடையே நடைபெற்ற போட்டிகளும் டிராவானது. மற்றொரு போட்டியில் பாவெல் எல்ஜனோவ் - சனன் ஸ்ஜுகிரோவிடம் தோல்வியை தழுவினார்.
இதையும் படிங்க:விரக்தியில் அன் ஃபாலோ (unfollow) செய்த ரசிகர்கள்.. மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டன் ரோகித் நீக்கத்தின் பின்னணி என்ன?
இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், போட்டிக்கான பட்டியலில் சனன் ஸ்ஜுகிரோ முதல் இடம் வகிக்கிறார். இதையடுத்து இந்திய வீரர் ஹரி கிருஷ்ணா 2வது இடத்திலும், அரோனியன் லெவன் மற்றும் குகேஷ் ஆகியோர் முறையே 3வது மற்றும் 4வது இடத்திலும் உள்ளனர்.
இவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பாக அமையும். மேலும், இந்த போட்டிக்குப் பரிசுத் தொகையாக 50 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 15 லட்ச ரூபாயும், 2வது இடத்தை பிடிப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாயும், 3வது இடத்தை பிடிப்பவர்களுக்கு 8 லட்ச ரூபாயும் வழங்கப்படுகிறது.
அதே போல் 4வது முதல் 8வது இடம் பிடிப்பவர்களுக்கு முறையே 5 லட்சம் ரூபாயு, 4 லட்சம் ரூபாயு, 3.5 லட்ச ரூபாயும், 2.5 லட்ச ரூபாயும், 2 லட்ச ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் ரோகித் சர்மா! முன்னாள் வீரர் பத்ரிநாத் சூசகம்! என்ன சொன்னார் தெரியுமா?