சென்னை: வண்ணாரப்பேட்டைக்கு உட்பட்ட காத்பாடாவில் இரு சக்கர வாகனம் காணாமல் போனதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், பாப் கட்டிங் செய்த ஒரு பெண் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சென்ட்ரலை சேர்ந்த 16 வயது சிறுமி என்பது தெரிய வந்தது. மேலும் இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்கிற ஆசையில், அவர் சென்னையில் இதுபோன்ற 4 இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியதும், அவ்வாறு திருடிச் செல்லும் இருசக்கர வாகனத்தை ஓட்டிவிட்டு, பெட்ரோல் தீர்ந்தவுடன் அங்கேயே விட்டுவிட்டு போவதை வழக்கமாக வைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.