தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பறிமுதல்

சென்னை: தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டதில், உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 8 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

chennai

By

Published : Mar 22, 2019, 5:55 PM IST

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருள்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பூக்கடை வால்டாக்ஸ் சாலையில் நேற்று (மார்ச் 21) இரவு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்தநான்கு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

அதன்படி, லோகேஷ் என்பவரிடம் இருந்து 6 கிலோ 588 கிராம் தங்க நகைகளும், ஜீவன் ஜெயின் என்பவரிடமிருந்து 1 கிலோ 700 கிராம் தங்கமும், 30 லட்சம் ரூபாய் பணமும், ஜெகதீஷ் என்பவரிடமிருந்து 30 கிலோ வெள்ளிப் பொருட்கள், சசிகாந்த் என்பவரிடம் இருந்து 10 கிலோ வெள்ளி இருந்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தங்கம், வெள்ளி அனைத்திற்கும் உரிய ஆவணங்களின்றி இருந்ததால் அதனை பறிமுதல் செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னையில், ஒரேநாளில் பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details