தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில் திடீர் கட்டண உயர்வு:காரணம் இதுதான்! - பயணிகள்

விமானக் கட்டணங்கள் இருமடங்கு உயர்ந்த போதிலும் சென்னைக்கு வரும் விமானங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 5, 2023, 7:58 PM IST

சென்னை: கோடை விடுமுறையை சொந்த ஊரில் கழிப்பதற்காக சென்னை நகரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட இருந்தன. ஆனால் கோடை வெப்பம் அதிகமாக உள்ளதால் கோடை விடுமுறை ஜூன் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெளியூர் சென்றிருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக மீண்டும் சென்னை நகருக்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர். இதனால் அரசு போக்குவரத்து கழகம் கூடுதலாக ஏராளமான பேருந்துகளை குறிப்பாக தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னை நகருக்கு இயக்கத் தொடங்கியிருக்கிறது.

இதையும் படிங்க:மகளின் பிறந்தநாளில் காதலனை கொலை செய்த தந்தை.. கோவையில் நடந்தது என்ன?

அதைப்போல் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவுகள் அனைத்தும் காலியாகி வெயிட்டிங் லிஸ்ட் 300 வரை தாண்டிவிட்டது. உடனடி முன் பதிவான தட்கலிலும் ரயில் டிக்கெட்கள் கிடைக்கவில்லை.இதையடுத்து பயணிகள், விமானங்களை நோக்கி படை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் வெளியூர்களில் இருந்து குறிப்பாக மதுரை, தூத்துக்குடி,திருச்சி, கோவை, திருவந்தபுரம் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில், பயணிகள் கூட்டம் பெருமளவு அதிகரித்ததோடு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வருவதற்கு சாதாரண நாட்களில் ரூ.3,629-ஆக இருந்த கட்டணம், தற்போது ரூ.8,478 லிருந்து ரூ. 12,163வரை அதிகரித்துள்ளது. அதேபோல, தூத்துக்குடியில் இருந்து சென்னை வருவதற்கு சாதாரண நாட்களில் ரூ.4,401 கட்டணம் பெறப்பட்ட நிலையில், தற்போது ரூ.8,062-ல் இருந்து ரூ.14,116வரை உயர்ந்துள்ளது. அதேபோல திருச்சி-சென்னை கட்டணம் சாதாரண நாட்களில் ரூ.2,718, ஆனால் தற்போது ரூ.6,865-ல் இருந்து 11,195-வரை அதிகரித்துள்ளது.

மேலும், திருவனந்தபுரம் சென்னை சாதாரண நாட்களில் ரூ.3,225 தற்போது ரூ.10,225 முதல் ரூ.5,814 வரையும், கொச்சி சென்னை சாதாரண நாட்களில் ரூ.2,889 ஆனால் தற்போது ரூ.8,357 முதல் ரூ.4,012 வரை என பல மடங்கு விமான கட்டணம் உயர்ந்துள்ளது. இது ஞாயிறு முதல் செவ்வாய் வரை உள்ள கட்டண விவரங்கள் ஆகும்.

இவ்வாறு பல மடங்கு, விமான கட்டணங்கள் திடீரென அதிகரிக்கப்பட்டாலும் பயணிகள் அந்தக் கட்டணங்களையும் செலுத்தி சொந்த ஊர்களில் இருந்து குறிப்பாக தென், மத்திய மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் பெருமளவு நிரம்பி வழிகிறது.

இதையும் படிங்க:TRB BEO Notification: வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்... B.Ed., பட்டதாரிகள் தயாரா?

ABOUT THE AUTHOR

...view details