தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் வரத்து குறைவால்  மீன்கள் விலை அதிகரிப்பு! - fish price list in chennai

சென்னை: புயல் எச்சரிக்கையையடுத்து மீன் வரத்து குறைந்துள்ளதால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

fish

By

Published : Nov 2, 2019, 5:21 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கையையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் சென்னையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.

சென்னையின் மிகப்பெரிய மீன் மார்க்கெட் சிந்தாதிரிப்பேட்டை. இங்கு காசிமேடு, ஈசிஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன. இந்த மார்கெட்டில் இருந்து தான் மாநகரின் பிற பகுதிகளுக்கு மீன்கள் விற்பனைக்காக் கொண்டு செல்லப்படுகிறது.

மீன்கள் விலைஉயர்வு

தற்பொழுது மகா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாத காரணத்தினால் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலையானது தற்போது அதிகரித்துள்ளது.

விலை உயர்ந்துள்ள மீன்களின் விலை:

வஞ்சிரம் மீன் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 500 ரூபாய்க்கும், அயிரை மீன் கிலோ 120 ரூபாய்க்கும், நண்டின் விலை 150 ரூபாயில் இருந்து 180 ரூபாயாகும் விற்பனை செய்யப்படுகிறது.

மீன்கள் விலைஉயர்வு
கலீல் ரகுமான், மீன் வியாபாரி

புயல் எச்சரிக்கை முடிவுக்கு வந்த பிறகு மீன்வரத்து அதிகரித்தால் மட்டுமே மீன்களின் விலை குறையலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - குமரி ஆட்சியர் அறிவுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details