சென்னை எழிலகத்தில் உள்ள கட்டடத்தில் நான்காவது மாடியில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அலுவலகத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பெரிதாக ஆவணங்கள் ,பொருள்கள் சேதமடையவில்லை என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து நேரத்தில் கமிஷனர் சஜ்ஜன்சிங் சவான் சம்பவ இடத்தில் இல்லாததால் உயிர் தப்பினார்.
குறிப்பாக கட்டடத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் பயந்து வெளியேறியதால், எழிலக வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.
ஏற்கனவே எழிலகத்தில் 2010, 2012, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிலும் 2012ஆம் ஆண்டு தீயை அணைக்க முற்பட்டபோது தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரியா ரவிச்சந்திரன் என்ற அலுவலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆனால் அப்போது தீ ஏற்பட்டபோது தீயை அணைக்க தேவையான அனைத்து உபகரணங்களும் எழிலகத்தில் வைக்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் இதுவரையில் எந்த விதமான உபகரணங்களும் பொறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அசாம் எண்ணெய் கிணற்றில் விபத்து