தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன அழுத்தத்தால் பெண் தற்கொலை! - Chennai Police

காதல் விவகாரம் தெரிந்து கண்டித்த பெற்றோரால் மன அழுத்தத்தில் இருந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை ஆவடிப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தத்தால் பெண் தற்கொலை
மன அழுத்தத்தால் பெண் தற்கொலை

By

Published : Mar 12, 2021, 4:00 PM IST

சென்னை:சென்னை, ஆவடி, வசந்தம் நகர், நேரு முதல் தெருவைச் சேர்ந்தவர் சில்வியா (25). இவர், ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 10) சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்கச் சென்றுள்ளார்.

பின்னர், நேற்று (மார்ச் 11) காலை நீண்ட நேரமாகியும் சில்வியா அறையைவிட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த பெற்றோர் அறையில் சென்று பார்த்தனர். அங்கு, சில்வியா உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.

காதல் விவகாரம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ஆவடி காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காவலர்களின் முதற்கட்ட விசாரணையில், சில்வியா தன்னுடன் பணியாற்றும் வாலிபரை காதலித்து வந்துள்ளார், இந்தக் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளதால், சில்வியாவை கண்டித்துள்ளனர்.

இதில், மன அழுத்தத்தில் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:வரதட்சணை கொடுமை... பெண் மரணம்: கோட்டாட்சியர் விசாரணைக்குப் பரிந்துரை

ABOUT THE AUTHOR

...view details