தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்ட பிரிண்டிங் பிரஸிற்கு சீல் வைப்பு..! - 45 லட்சம் கள்ள நோட்டுகள்

Chennai Fake Note Issue: ரூ.4.80 லட்சம் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட வழக்கறிஞர் சுப்பிரமணியனை காவலில் எடுத்து விசாரணை செய்ய நுங்கம்பாக்கம் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

chennai-fake-note-printing-press-sealed
chennai-fake-note-printing-press-sealed

By

Published : Aug 20, 2023, 4:37 PM IST

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலையோர காய்கறி கடையில் போலி ரூ.500 நோட்டை புழக்கத்தில் விட்ட சம்பவத்தில் வழக்கறிஞர் சுப்பிரமணியன், முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை, கள்ள நோட்டுகளை அச்சடித்த கார்த்திகேயன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ரூ.45 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விளம்பர படம் ஒன்றிற்காக வழக்கறிஞர் சுப்பிரமணியன் கள்ளநோட்டுகளை அச்சடிக்க கார்த்திகேயனிடம் தெரிவித்ததாகவும், அதன் பேரிலேயே கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்ததாகவும் காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கள்ளநோட்டுகள் அச்சடிக்க கார்த்திகேயனுக்கு உதவியதாக சூளைமேட்டைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரையும் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

கள்ளநோட்டுகளை அச்சடிப்பதற்கான பேப்பர் பண்டல்களை வாங்கி கொடுத்தது, கார்த்திகேயனுக்கு கள்ளநோட்டுகளை அச்சடிப்பதற்கான வேலையை கார்த்திகேயனுக்கு கொடுத்தது வினோத் குமார் என்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் சிக்கிய கள்ளநோட்டு கும்பல்..! இப்படித்தான் இருக்கும் கள்ள நோட்டு.. பொதுமக்களே உஷார்..

இந்த நிலையில் கள்ள நோட்டுகளை அச்சடித்தது சென்னை வடபழனி, அழகிரி நகர் கிழக்கு தெருவில் செயல்பட்ட பிரிண்ட் பிரஸில் என்பது நுங்கம்பாக்கம் காவல் துறையினர் விசாரணையில் தொியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் சம்பந்தப்பட்ட பிரிண்ட் பிரஸ் அலுவலகத்தை ஆய்வு செய்து சீல் வைத்தனர்.

மேலும், கள்ளநோட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வழக்கறிஞர் சுப்பிரமணியனை நுங்கம்பாக்கம் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

ரூ.4.80 லட்சம் கள்ளநோட்டுக்களை சுப்பிரமணியன் புழக்கத்தில் விட்டுள்ளது காவல் துறையினர் விசாரணையில் ஏற்கனவே தொியவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எந்தெந்த கடைகளில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது? கள்ளநோட்டுக்கள் அச்சிடுவதற்கும், புழக்கத்தில் விடுவதற்கு உதவியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வழக்கறிஞர் சுப்பிரமணியனை காவலில் எடுக்க நுங்கம்பாக்கம் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் - சென்னையில் மேலும் ஒருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details