சென்னை முகப்பேர் வளையாபதி சாலையைச் சேர்ந்தவர் ஹரி பிரசாத் (26). இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணிபுரிந்துவந்துள்ளார்.
இதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை இவர் நீண்டகாலமாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கின் காரணமாக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் அந்தப் பெண்ணை பார்க்க முடியாமல் ஹரிபிரசாத் தவித்துவந்துள்ளார்.
இதனால் நீண்ட நாள்களாக மன உளைச்சலில் இருந்த ஹரிபிரசாத், நேற்று இரவு திடீரென்று தனது அறையில் மின்விசிறியில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டார்.