சென்னை கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சி வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய மத்திய சென்னை மக்களவை உறுப்பினருமான தயாநிதிமாறன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில், 400 பயனாளிகளுக்கு பட்டாசு, இனிப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
ராதாபுரம் வெற்றியோடு திமுகவிற்கு 3 வெற்றிகள் - தயாநிதிமாறன்
சென்னை: ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை சேர்த்து மூன்று தொகுதிகளின் வெற்றி நிகழ்ச்சியாக இந்த நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தயாநிதிமாறன் கூறினார்.
dhayanidhi maran
அப்போது பேசிய அவர், "ராதாபுரம் தொகுதி நிலவரம் திமுகவின் வெற்றி என்பதை உயர் நீதிமன்றத்தில் உறிதியாகிவிட்டது. இந்தத் தொகுதியோடு இடைத்தேர்தல் வெற்றியையும் சேர்த்தே இந்த நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் சேகர் பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் ரங்கநாதன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.