தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஊரடங்கால் வேலையிழந்த வியாபாரி தற்கொலை! - chennai lockdown suicides

சென்னை: அம்பத்தூரில் கரோனா ஊரடங்கால் வேலையிழந்த வியாபாரி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide

By

Published : Sep 6, 2020, 4:36 PM IST

Updated : Sep 6, 2020, 5:25 PM IST

சென்னை அம்பத்தூர், வெங்கடாபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நிதில் (33). இவர், முளைகட்டிய பயிறு வகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

இதற்கிடையில், கரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு காலத்தில் நிதிலுக்கு தொழில் முடங்கியது. இதனையடுத்து அவர் வீட்டு வாடகை, குடும்பச்செலவுக்கு பணமின்றி தவித்து வந்துள்ளார். மேலும் அவர் இரு மகன்களுக்கு கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் இருந்துள்ளார்.

இதனால், மனமுடைந்து இருந்த நிதில் கடந்த வாரம் ஆகஸ்ட் 31ஆம் தேதி, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி நிதில் நேற்று(செப்.05) இரவு உயிரிழந்தார். புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல் துறை ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன் தலைமையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் தொழில் முடங்கியதால் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்பத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:கண்ணிமைக்கும் நேரத்தில் கையிலிருந்து மொபைல்போனை பறித்துச் சென்ற திருடர்கள்

Last Updated : Sep 6, 2020, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details