சென்னை முகப்பேர் மேற்கு பகுதி நொளம்பூர் காவல் நிலையம் அருகில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஸ்டாம்ப் போன்றவைகள் கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் மாணவர்கள் போன்று வேடமிட்டு, போதை பொருட்கள் விற்பதாக தகவல் வந்த இடத்தில் காத்திருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு போதைப்பொருட்களை விற்க இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.
மாணவர்களிடம் போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது! - chennai
சென்னை: முகப்பேரில் போதை மாத்திரை விற்ற வாலிபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 3.75 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
போதை மாத்திரை விற்கும் நபர்
இதனையடுத்து அந்த வாலிபரை போதை பொருள் தடுப்பு காவல்துறையினர்கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சரத் (எ) சரவணன் என்பது தெரியவந்தது. மேலும், போதை மருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த நபரை அயப்பாக்கத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.