கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்துவருகிறது. இதனால், அன்றாடத் தேவையான பால், மளிகைப் பொருள்கள், காய்கறிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கடைகள் தவிர வணிக வளாகங்கள், திரையரங்குகள், மதுபான கடைகள், தங்கும் விடுதிகள் ஆகியவை செயல்பட அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், மதுவிற்கு அடிமையான சிலர் மது கிடைக்காததால் வார்னிஷ், சானிடைசர், ஒயிட்னர் உள்ளிட்டவைகளைக் குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் விரக்தியில் தற்கொலையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த சப்ளையர்கள் போதைக்கு அடிமையாக இருக்கும் நபர்களுக்கு விலை உயர்ந்த போதைப்பொருள்களைக் கூடுதல் விலைக்கு சப்ளை செய்துவருகின்றனர்.