சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், மாநில செயலாளர் சாந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில்,
பிரசவ கால தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். ஆனால் அந்த நடவடிக்கைகளால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. தமிழ்நாட்டில் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் தலைநகர் சென்னையிலேயே அதிகரித்துள்ளது. மேலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவமனைகளும் அதிகரித்துவருகிறது.
பிரசவகால இறப்பு விகிதம் அதிகரிப்பு என குற்றச்சாட்டு பிரசவ கால உயிரிழப்புகளை குறைக்க அறுவை அரங்கம் , ரத்த சேமிப்பு வங்கி, மகப்பேறு மருத்துவர்கள், குழந்தைகளுக்கான மருத்துவர்கள் 24 மணி நேரம் இருந்தால் மட்டுமே பிரசவம் பார்க்கப்பட வேண்டும். கர்ப்பிணி பெண்களின் வசிப்பிடம் அருகிலேயே மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை இருந்தாலும் அவர்கள் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் போதுமான மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. மகப்பேறு மருத்துவர்கள் 48 மணி நேரம் பணி செய்ய வலியுறுத்தப்படுவதால் அவர்கள் மன உளைச்சல் அடைகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வேறு சில நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. ஆகவே உடனடியாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையும் படிங்க: சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா: மருந்து தயார்... இந்தியாவிலிருந்து கிளம்பும் போதி தர்மர்
!