தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றலாம் - மாவட்ட ஆட்சியர் அறிக்கை - போயஸ் கார்டன்

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்றலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

By

Published : Aug 14, 2019, 2:34 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கான நிலம் எடுப்பு அலுவலராக சென்னை மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டாக்டர் ஏனோக் தலைமையில் நிலம் எடுப்பது தொடர்பான ஆய்வுக் குழுவை அமைத்தார்.

இந்தக் குழுவினர் போயஸ் கார்டனில் தங்கி உள்ளவர்களிடமும், பொதுமக்களிடமும் கருத்து கேட்டு விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி 2ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் கருத்துகள் பெற்றார்.

இவ்வாறு சமூக தாக்க மதிப்பீடு இறுதி அறிக்கை, நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் நிலம் எடுப்பு அலுவலரின் அறிக்கை ஆகியவற்றை பரிசீலித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில், ’வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது நியாயமான மற்றும் பொதுநலன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. வேதா இல்லத்தை தவிர்த்து நகரத்தின் வேறு பகுதியில் இந்த நினைவு இல்லத்தை அமைப்பது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானதாக அமையும். இதனால் பொது மக்களின் உணர்வும் பாதிக்கப்படும்.

மேலும் நில எடுப்புக்கு உள்ளாகும் போயஸ் தோட்டத்து இல்லத்தின் மொத்த மதிப்பு 32 கோடியே 9 லட்சத்து 33 ஆயிரத்து 827 ரூபாய். நிலத்திற்கான மதிப்பு மட்டும் 29 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரத்து 320 ரூபாய். இந்த நில எடுப்பினால் பாதிக்கப்படக்கூடிய நபர்களோ, குடும்பங்களோ எவரும் இல்லை. சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதும் இல்லை. நினைவில்லத்தை காண வரும் மக்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு டி.எம்.எஸ் மற்றும் செம்மொழிப் பூங்கா வளாகங்களில் உள்ள காலி இடங்களை வாகனங்கள் நிறுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ளாம்.

அதேபோல் போயஸ் கார்டனிலும் ஆன்லைன் மூலம் பார்வையாளர்களை பதிவு செய்து அனுமதிக்கலாம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு முன்மாதிரியான தலைவராக, ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதற்கும் எடுத்துக்கட்டாக திகழ்வதால் அவர் வாழ்ந்து மறைந்த வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது என்பது முற்றிலும் பொருத்தமான ஒரு நடவடிக்கை ஆகும்’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details