சென்னை:மாண்டஸ் புயல் மழையின் காரணமாக கடந்த 9-ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நாளை பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் இயங்கும்! - சென்னை அனைத்து பள்ளிகள்
சென்னையில் நாளை பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அறிவித்துள்ளார்.
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பி உள்ள கடிதத்தில், "மாண்டஸ் புயல் மழையின் காரணமாக 9-ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த பணி நாளினை ஈடு செய்திடும் பொருட்டு 17-ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு வேலை நாளாக செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆவின் பாலை தொடர்ந்து நெய் விலையும் உயர்வு