வீராட் கோலியை சந்தித்த சென்னை ரசிகர் ஸ்ரீநிவாஸ் சென்னை:உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட 13வது உலகக் கோப்பை இன்று (அக்டோபர் 05) தொடங்கியது. இந்த தொடர் இன்று முதல் வரும் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரை இம்முறை முழுவதுமாக இந்தியா மட்டுமே நடத்துகிறது.
இந்நிலையில், சென்னையில், வரும் 8ஆம் தேதி, இந்தியா தனது முதல் ஆட்டமாக ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சி சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் (19) இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஓவியத்தை வரைந்து இன்று (அக்.05) அவரிடம் காண்பித்துள்ளார்.
இது குறித்து, ஸ்ரீநிவாஸ் ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்குச் சிறப்பு பேட்டி அளித்தார், அதில், "நான் 12 வயதிலிருந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிரிக்கெட்டில் எனக்குத் தனி ஆர்வம் உண்டு. மேலும் விராட் கோலி அவர்களைப் பார்ப்பதற்காக, இரண்டு ஆண்டுகள், நான் காத்துக் கொண்டிருந்தேன், இறுதியாக இன்று என் கனவு நினைவாகி உள்ளது.
ஏற்கனவே விராட் கோலியைப் பார்ப்பதற்காக நான் பெங்களூரூ வரை சென்று உள்ளேன். அங்கு எல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இன்று எதிர்பாராத நிலையில், எனக்கு அந்த பொன்னான வாய்ப்பு கிடைத்தது. மேலும், அவரிடம் நான் வரைந்த ஓவியத்தைக் காண்பித்தது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்னைப் பார்க்க, அவர்(விராட் கோலி) நேராக வந்தார், வந்த பிறகு, இதில் நான், கையெழுத்துப் போடவா என்று கேட்டார். நான் அவரிடம் உங்களிடம் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். அதன் பின் நாங்கள் புகைப்படம் எடுத்து கொண்டாம். மேலும், நான் அடுத்தாக இந்திய கிரிக்கெட்டின் வீரர் தோனியின் ஓவியத்தை வரைந்து வருகிறேன். விரைவில் அவரையும் சந்தித்து ஓவியத்தைக் காண்பிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
40 மணிநேர உழைப்பு: சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஸ்ரீநிவாஸ், சென்னை அரசு மாற்றுத்திறனாளி பள்ளியில் பயின்று வருகிறார். மேலும் ஓவியம், டிசைனிங்க் போன்றவற்றில் ஆர்வம் மிக்கவர். இவர் விராட் கோலியின் படத்தை வரைய 40 மணிநேரம் செலவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:Eng Vs NZ World Cup 2023: நியூசிலாந்துக்கு 283 ரன்கள் இலக்கு! வாகைசூடுமா?