சென்னை:தி நகரில் நீண்டகாலமாக மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் மாம்பலம் ரயில் நிலையத்திற்கும் தி- நகருக்கு இடையிலான நடைபாதை மேம்பாலம் ஆகும். மேம்பாலம் கட்டுமான பணிகளை சென்னை துணை மேயர் மகேஷ் குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் இன்று(மார்ச் 19) நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ் குமார், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நீண்டகாலமாக முடிவு பெறாத பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக திநகரில் கட்டப்பட்டு வரும் ஸ்கை வாக் மேம்பாலத்தை இன்று ஆய்வு செய்தோம்.
நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். இந்த மேம்பாலம் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும், இதனை முதலமைச்சர் திறந்து வைப்பார்.