தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்: பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு - பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள், பாலியல் குற்றங்கள் நிகழாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் பெற்றோர்களிடம் கணினி வழி மூலம் குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி நடத்தினார்.

police
police

By

Published : Sep 5, 2020, 11:17 PM IST

சென்னை அயனாவரம், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குள்பட்ட பிரிக்லின் சாலை, புரசைவாக்கம், தி ராயல் என்கிளேவ், அண்ணா நகர் ஆகிய இடங்களில் வசித்துவரும் பொதுமக்களுக்கு கணினி வழி மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும், கணினி வழி மூலம் தெரியாத நபர்களிடம் பேசுவதைத் தவிர்க்கவும், புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவற்றை அனைவரிடமும் பகிர வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.

தற்போது ஆன்லைன் வகுப்பு மூலம் குழந்தைகள் பாடத்தைக் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் செல்போனை பெற்றோர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும் அப்பகுதியில் வசிக்கும் ஒருவரிடமும் குழந்தையைத் தனியாக விட வேண்டாம் எனவும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனடியாக sos செயலி,1091,1098,9150250665 என்ற எண்ணிற்குத் தொடர்புகொள்ளலாம் எனவும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details