தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லையில் 54 ஆயிரம் இழப்பு: மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம்! - மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம்

சென்னை: ஆன்லைனில் 54 ஆயிரம் பணத்தை இழந்தவருக்கு கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் உதவியால் வங்கியிலிருந்து பணம் பெற்றுத் தரப்பட்டது.

ஆன்லையில் 54ஆயிரம் இழப்பு: மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம்!
ஆன்லையில் 54ஆயிரம் இழப்பு: மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம்!

By

Published : Dec 6, 2020, 6:19 PM IST

சென்னை சூளை பகுதியில் வசித்துவரும் பாலசுப்பிரமணியன், தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருந்திருக்கிறார். அதன் ரகசிய எண்ணை தவறாக உள்ளிட்டதால், வங்கியால் கிரெடிட் கார்டு பிளாக் செய்யப்பட்டது.

இதையடுத்து பாலசுப்பிரமணியன் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதியன்று இணையதளம் மூலம் தேடி வாடிக்கையாளர் சேவை மையம் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் பாலசுப்பிரமணியத்தின் கிரெடிட் கார்டு விவரத்தைக் கேட்டுள்ளார். இதை நம்பி பாலசுப்பிரமணியன் தனது கிரெடிட் கார்டு விவரங்களைக் கொடுத்துள்ளார்.

மேலும், ஓடிடி எண்ணையும் பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் 54 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. உடனடியாக கீழ்பாக்கம் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்துள்ளார் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை செய்ததில் அடையாளம் தெரியாத நபர் பாலசுப்பிரமணியன் கிரெடிட் கார்டிலிருந்து ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்தது தெரியவந்துள்ளது. மேற்படி சைபர்கிரைம் காவல் துறையினர் சார்பாக அந்தப் பண பரிவர்த்தனை குறித்து தனியார் வங்கிக்கு பாலசுப்பிரமணியன் பணத்தை மீண்டும் திருப்பிக் கொடுக்கும்படி விதிகளுக்குள்பட்ட பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து தனியார் வங்கி நிர்வாகம் பாலசுப்பிரமணியம் வங்கியில் 54 ஆயிரம் ரூபாயைச் செலுத்தியது.

இதையும் படிங்க...நாளை முதல் கல்லூரிகள் திறப்பு: கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details