சென்னை விமான நிலையம் எதிரே அமைந்துள்ள மீனம்பாக்கம் பாண்டியன் தெருவில் 200க்கும் மேற்பட்ட கூலி வேலை செய்யும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததில் இருந்தே போதிய உணவு பொருள்கள் இன்றி தவித்து வந்தனர்.
இதை அறிந்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடிவு செய்து சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சக்கரை ஆகிய அத்தியாவசியப் பொருள்களை வழங்கினர்.