சென்னையில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் 200 ரூபாயும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் சென்றால் 500 ரூபாயும் அபராதத்தொகை வசூலிக்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, துணை ஆணையர்கள் மேற்பார்வையில் வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும் வெளியே சுற்றினால் போக்குவரத்து காவல் துறையினர் அபராதத் தொகையை வசூலித்து வந்தனர்.