சென்னை: விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் வாழ்த்து..!
டிசம்பர் 31ஆம் தேதி இரவு முதல் புத்தாண்டு தினம் வரை சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் சாலை விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கவும் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.
இதனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தால் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்த பொது மக்களுக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடலின் அலையில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு!
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனராவ் இவரது மகன் சம்பிரித் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சம்ரித் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேருடன் புத்தாண்டு தினத்தன்று மெரினா கடற்கரைக்குச் சென்றுள்ளனர். இதையடுத்து, விவேகானந்தர் இல்லம் அருகில் கடற்கரையில் ஐந்து பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ராட்ச அலையில் சம்ரித், ராஜ் பரத், ஷாஹித் மூவரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதனால், அதிர்ச்சடைந்த அவர்களது சக நண்பர்கள் கூச்சலிட்டனர் இதனைக் கண்ட அங்கு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக விரைந்து சென்று கடல் அலையில் சிக்கிய மூவரில், ராஜ் பரத் மற்றும் ஷாகித் ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், கடல் அலைகள் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவன் சம்ரித்தின் உடல் தற்போது, விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. அதனை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.