சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. கட்டட தொழிலாளியான இவர் தனது மனைவி தனலட்சுமியுடன் அதே பகுதியில் வசித்துவருகிறார். இந்நிலையில் தனலட்சுமி அதே பகுதியில் உள்ள தனது சித்தியின் பழக்கடைக்கு அடிக்கடி சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் வேலைக்குச் செல்லும் கார்த்திக்கு உரிய நேரத்தில் உணவு சமைத்துக் கொடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளார்.
போலீஸ் அய்யா என் பொண்டாட்டி என்ன அடிச்சிடுச்சு...!
சென்னை: தனது மனைவி தன்னை தாக்கியதாகக் கட்டடத் தொழிலாளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முதல் தகவல் அறிக்கை
இதில் ஆத்திரமடைந்த கார்த்தி தனது மனைவியிடம் சமைக்காதது குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தனலட்சுமி கரண்டியால் கணவரை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கார்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கைப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.