தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜிக்கு மேலும் 7 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு! - சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்

Senthil Balaji Judicial custody: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை மேலும் 7 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 1:16 PM IST

Updated : Oct 13, 2023, 1:48 PM IST

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால், கடந்த ஜூன் 14 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்தனர்.

பின்னர், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அவரது நீதிமன்றக் காவல் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், வழக்கு மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையே, அவரது ஜாமீன் மனு கடந்த 20ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் கடந்த 29ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 13ஆம் தேதி வரை 7வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளிக் காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் அவரது நீதிமன்றக் காவல் 8வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் ஒத்திவைப்பு!

Last Updated : Oct 13, 2023, 1:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details