சென்னை: போகி பண்டிகையில் தேவையில்லாத பொருட்கள் எரிப்பதை தடுக்கும் வகையில் அவற்றை தனியாக தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை ஜனவரி 14,15,16 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அதில் 14 தேதி காலை போகி பண்டிகையின் போது பொது மக்கள் பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre), ரப்பர் ட்யூப் (Rubber Tube), மற்றும் நெகிழி (Plastic) ஆகியவற்றை எரிப்பது வழக்கமாகும்.
தேவையற்ற பொருட்களை எரிப்பது மூலம் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது என பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு இதனை தடுப்பதற்கு மாநகராட்சி புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.
போகி பண்டிகையின் போது 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தடுக்கும் வகையில் அவற்றை தனியாக பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஒப்படைக்க மாநகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
"போகியில் பொருட்களை எரிக்க வேண்டாம்" சென்னை மாநகராட்சி புது முயற்சி!! - சுற்றுசூழல் மாசு
போகி பண்டிகையில் எரிப்பதை தடுக்கும் வகையில் தேவையில்லாத பொருட்களை தனியாக தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது
போகி பண்டிகையில் எரிப்பதை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி புது முயற்சி
இதற்காக 1 முதல் 15 உள்ள மண்டல அலுவலர்கள் இன்று முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் BOV வாகனம் மூலம் ஒலிப்பெருக்கியில் விளம்பரம் செய்ய வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் இழப்பீடு - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி