தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி சான்றிதழ் அளித்தால் கடும் நடவடிக்கை - தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை! - கரோனா நோயாளிகளுக்கு போலி சான்றிதழ் அளித்த மருத்துவமனை நிர்வாகம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலிலேயே இருந்து கொள்ளலாம் என போலி சான்றிதழ் அளித்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராடசி தெரிவித்துள்ளது.

Fake Certifcate: போலி சான்றிதழ் அளித்த மருத்துவமனை; சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
Fake Certifcate: போலி சான்றிதழ் அளித்த மருத்துவமனை; சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

By

Published : Dec 26, 2021, 7:05 AM IST

சென்னை: கடந்த சில நாட்களாக தேனாம்பேட்டை மண்டலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆய்வு செய்ததில், கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான சிலர் மருத்துவமனை தனிமைப்படுத்தலை தவிர்க்க முயற்சித்துள்ளனர்.

அதன்படி தொற்று பாதிப்புக்குள்ளானோர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று வீட்டு தனிமை போதுமானது என மருத்துவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டது தெரியவந்துள்ளது. இதனால் அருகிலிருக்கும் வீடுகளுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதால் மாநகராட்சிக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதனையடுத்து தனியார் மருத்துவமனையை எச்சரித்து, மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், "கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். வீட்டுத் தனிமையில் இருந்து கொள்ளலாம் என சான்றிதழை அளிக்க கூடாது.

மீறினால் மருத்துவமனை நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:NEET Suicide:நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை..!

ABOUT THE AUTHOR

...view details