தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மழைநீர் வடிகாலில் கழிவு நீர் கலப்பு விவகாரம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகாலில் கழிவு நீரை செலுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநகராட்சி  சென்னை மாநகராட்சி  சென்னை செய்திகள்  மழைநீர் வடிகால்  கழிவு நீர்  அபராதம்  drainage  chennai corporation  chennai corporation warning about drainage  chennai news  chennai latest news
மாநகராட்சி

By

Published : Oct 28, 2021, 6:08 PM IST

சென்னை:வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்கள், பல்வேறு இடங்களுக்கு சென்று மழைநீர் வடிகால் பணியை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 21 ஆம் தேதி அன்று மேற்கொண்ட ஆய்வின் போது பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகாலில் கழிவு நீர் கலப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகாலில் கழிவு நீரை கலக்க செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். மேலும் ஐந்தாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை அபராதம் விதிக்குமாறு அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

குறிப்பாக வீடுகளிலிருந்து கழிவுநீர், மழை நீர் வடிகாலில் கலந்தால், அவர்களுக்கு ஐந்தாயிரமும், தனியார் நிறுவனங்களில் இருந்து கலந்தால் அவர்களுக்கு 10 ஆயிரமும், சிறப்பு தனியார் நிறுவனங்களுக்கு 50 ஆயிரமும், சிறப்பு குடியிருப்பு பகுதிகளிலிருந்து கழிவுநீர் கலந்தால் 25 ஆயிரமும், பல்லடுக்கு தனியார் நிறுவனங்களில் இருந்து கழிவு நீர் கலந்தால் 2 லட்சமும், பல்லடுக்கு குடியிருப்பில் இருந்து கழிவு நீர் கலந்தால் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: போக்குவரத்து துறையில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன - ராஜகண்ணப்பன்

ABOUT THE AUTHOR

...view details