சென்னையில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கரோனா தொற்று தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ள போதிய இடங்கள் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தற்போதுவரை மாநகராட்சி நிர்வாகத்திடம் பல்கலைக்கழகம் ஒப்படைக்கப்படவில்லை.