தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுப்படுத்தப்படும் பகுதியை குறைக்கும் சென்னை மாநகராட்சி - கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

சென்னை முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 77ஆக குறைந்துள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

By

Published : Jul 23, 2020, 4:37 PM IST

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டுவருகிறது.

இந்த பரவலை தடுக்கும் பொருட்டு ஒரு தெருவில் ஒருவருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டால் முழு தெருவையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்திருந்தது.

இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் தெருவை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துவருகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு மாநகராட்சியினர் தன்னார்வலர்கள் உதவிசெய்து வருகின்றனர்.

மண்டலவாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது அதன்படி,

திரு.வி.க நகர் - 7
அம்பத்தூர் - 12
அண்ணா நகர் - 22
கோடம்பாக்கம் - 17
வளசரவாக்கம் - 5
ஆலந்தூர் - 5
அடையார் - 9

14 நாள்களுக்கு கட்டுப்படுத்தபட்ட பகுதியில் எந்த நோய் தொற்றும் ஏற்படவில்லை என்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து நீக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details