சென்னை : மாநகராட்சி அதிகாரப்பூர்வ இணையதளம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளத்தை ஒரு வருடம் கையாள்வதற்கு 2020ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அன்று இணையதளத்தின் மூலம் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை கே.ஸ் ஸ்மார்ட் சொலியூஷன் ( k.s.smart solution) என்ற நிறுவனம் 2 கோடியே 31 லட்சத்து 26 ஆயிரத்து 761 ரூபாய்க்கு எடுத்தது.
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்
ஒரு நிறுவனத்தின் சமூக வலைதளத்தை ஒரு வருடம் கையாள்வதற்கு இவ்வளவு பெரிய தொகை தேவையற்றது, மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என பலர் கருத்து தெரிவித்தனர்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக வலைதளத்தை அந்த அந்த நிர்வாகத்தின் அலுவலர்களே நிர்வகிக்கும்போது சென்னை மாநகராட்சிக்கு மட்டும் ஏன் வெளியில் விட வேண்டும் என கேள்வி எழுப்பினர்.