சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் தினமும் சேகரிக்கப்படும் சுமார் 5100 மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள் மூன்று சக்கர மிதிவண்டிகள், பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மற்றும் காம்பேக்டர் வாகனங்களைக் கொண்டு குப்பைகளைக் கையாளும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களிலும் தினசரி உருவாகும் குப்பையினை சேகரிக்க 14,216 காம்பாக்டர் குப்பைத் தொட்டிகளும், அவற்றை அகற்ற 261 காம்பேக்டர் வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன.
பொதுமக்கள் தெரிந்துகொள்ள
இந்தநிலையில், தற்போது குப்பை அகற்றும் காம்பேக்டர் வாகனங்களின் இயக்க நேரம், வாகனங்கள் குப்பைத் தொட்டிகளிலிருந்து குப்பை அகற்றும் இடங்கள் குறித்த விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.