சென்னை: கரோனா பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை 97.69% முதல் தவணை தடுப்பூசியும், 86.62% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 6,02,998 முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது கடந்த இரண்டு நாள்களாக சற்று அதிகரித்துள்ளது. மேலும் பண்டிகை கால விடுமுறைகள் நெருங்கி வரும் வேளையில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியவும், தகுந்த இடைவெளியை பின்பற்றவும், கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.