தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் மட்டுமே கரோனா வைரஸ் அதிதீவிரமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்றின் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே தான் செல்கிறது.
இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படும் நோயாளிகளுக்கான உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இம்மாதம் ரமலான் நோன்பு இருக்கும் நோயாளிகள், மற்ற நோயாளிகள் என இரு பிரிவுகளாகப் பிரித்து உணவு முறையை வெளியிட்டுள்ளது.
ரமலான் நோன்பு இருக்கும் நோயாளிகளுக்கான உணவு முறை:
நேரம் - உணவு:
4:00 am - ரொட்டி, பிஸ்கட்
4:30 am - கபசுரக் குடிநீர்
7:00 am - பால், வாழைப்பழம்
9:30 pm - சாதம், சாம்பார், ரசம், பொரியல், முட்டை
10:00 pm - சிறிதளவு பூண்டுடன் சேர்த்து பால்
மற்ற நோயாளிகளுக்கான உணவு முறை:
நேரம் - உணவு:
7:00 am - காபி, பிஸ்கட்
8:30 am - இட்லி சாம்பார்
10:00 am - கபசுரக் குடிநீர்
11:00 am - வேகவைத்த சுண்டல் அல்லது வேர்க்கடலை, எலுமிச்சை சாறு (உப்பு அல்லது சர்க்கரை)
1:00 pm - சாதம், சாம்பார், ரசம், முட்டை, பொரியல், தயிர் சாதம், ஒருநாள் விட்டு ஒருநாள் காரக்குழம்பு
4:00 pm - காபி, பிஸ்கட்
7:30 pm - வாழைப்பழம்
8:00 pm - சாதம், சாம்பார், ரசம், பொரியல்
10:00 pm - சிறிதளவு பூண்டுடன் சேர்த்து பால்
கபசுரக் குடிநீர் பருகும் முறை மற்றும் அளவு:
பெரியவர்கள் - ஒரு வேளைக்கு 60 ml