தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை 1% குறைந்த கரோனா சிகிச்சை பெறுவோர் - கரோனா வைரஸ் பரவல் விகிதம்

சென்னை: மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை ஒரு விழுக்காடாக குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

chennai corporation released corona updates on this date
chennai corporation released corona updates on this date

By

Published : Jan 7, 2021, 1:55 PM IST

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. கோடம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகரிப்பதாகத் தெரிகிறது. அவற்றைக் குறைக்க அந்தந்த மண்டலத்தில் அதிக மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.

சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சியில் கரோனா வைரஸ் பரவல் விகிதம் மூன்றுக்கு கீழ் இருந்தது. கரோனா வைரசிலிருந்து குணமடைந்தவரின் விழுக்காடும் 97ஆக அதிகரித்தது. தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவோரின் எண்ணிக்கையும் ஒரு விழுக்காடாக மாறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலவாரியாக சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி,
அண்ணா நகர் - 299 பேர்

கோடம்பாக்கம் - 328 பேர்

தேனாம்பேட்டை - 211பேர்

ராயபுரம் - 156 பேர்

தண்டையார்பேட்டை - 120 பேர்

திரு.வி.க. நகர் - 174 பேர்

அடையாறு - 256 பேர்

வளசரவாக்கம் - 211பேர்

அம்பத்தூர் - 159 பேர்

திருவொற்றியூர் - 36 பேர்

மாதவரம் - 63 பேர்

ஆலந்தூர் - 135 பேர்

சோழிங்கநல்லூர் - 49 பேர்

பெருங்குடி - 97 பேர்

மணலி - 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தம் இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 937பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு லட்சத்து 20 ஆயிரத்து 575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எஞ்சியுள்ள இரண்டாயிரத்து 327 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் நான்காயிரத்து 35 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் : பண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கேரள அரசு முடிவு

ABOUT THE AUTHOR

...view details