சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 650 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 698 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 11 ஆயிரத்து 498 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதிக பாதிப்புள்ள நபர்கள் அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பாதிக்கப்பட்ட நபரை சந்திக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. அவர்களின் உடல்நிலையை அறிய அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து சென்றால் அவர்களுக்கும் கரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், பொதுமக்களில் நலன் கருதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களின் உடல்நல விவரங்கள், பிற தகவல்கள் ஆகியவற்றைப் பெற தொடர்பு எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு :