தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 27, 2020, 7:10 PM IST

ETV Bharat / state

சென்னையில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக உயர்வு

சென்னை: கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக உயர்ந்துள்ளதாகவும், புதிதாக 510 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா

நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவல் தடுப்புப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றன.

இதில், குறிப்பாக தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே செல்கிறது.

இதில், சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,640ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 510 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ராயபுரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2000த்தைக் கடந்துள்ள நிலையில், தொற்றுப் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மண்டல வாரியாக கரோனா பாதிக்கப்பட்டோரின் விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி,


ராயபுரம் - 2,145 பேர்

திரு.வி.க. நகர் - 1,285 பேர்

வளசரவாக்கம் - 758 பேர்

தண்டையார்பேட்டை - 1,160 பேர்

தேனாம்பேட்டை - 1,262 பேர்

அம்பத்தூர் - 484 பேர்

கோடம்பாக்கம் - 1,525 பேர்

திருவொற்றியூர் - 344 பேர்

அடையாறு - 653 பேர்

அண்ணா நகர் - 975 பேர்

மாதவரம் - 256 பேர்

மணலி - 156 பேர்

சோழிங்கநல்லூர் - 197 பேர்

பெருங்குடி - 203 பேர்

ஆலந்தூர் - 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும், 5,504 பேர் பூரண குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதுவரை சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:'மதுபானக் கடைகளில் விலைப் பட்டியல் ஒட்டப்படுகிறதா?' - உயர் நீதிமன்றம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details