தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 796 பேர் தனிமைப்படுத்தல்! - கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை: பெருநகர சென்னையின் கரோனா மையங்களில் 796 பேர் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

chennai corporation release a list of people in corona centre
chennai corporation release a list of people in corona centre

By

Published : May 9, 2020, 12:21 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, சென்னையில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து விஸ்வரூபம் எடுத்துவருகிறது. இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இருப்பினும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சிறு அறிகுறிகள் இருப்பவர்களும் கரோனா மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக சென்னையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், பல்வேறு தனியார் கல்லூரிகளில் கரோனா மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் இரண்டு செவிலியர், இரண்டு மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எந்தெந்த கரோனா மையங்களில் எத்தனை நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து டி.ஜே. வைஷ்ணவ் கல்லூரிக்கு மாற்றி தங்கவைத்திருப்போர் எண்ணிக்கை 164 ஆகவும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திற்கு மாற்றி தங்கவைத்திருப்போர் எண்ணிக்கை 382 ஆகவும்,

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியிலிருந்து என்.எஸ்.டி.ஐ. கிண்டிக்கு மாற்றி தங்கவைத்திருப்போர் எண்ணிக்கை 24 ஆகவும், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து லயோலா கல்லூரிக்கு மாற்றி தங்கவைத்திருப்போரின் எண்ணிக்கை 96 ஆகவும், ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து வேலம்மாள் பொறியியல் கல்லூரிக்கு மாற்றி தங்கவைத்திருப்போர் எண்ணிக்கை 216 ஆகவும் உள்ளது தெரிகிறது.

இதில் நேற்று லயோலா கல்லூரியிலிருந்து 86 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தயாராகும் 400 தனிமைப்படுத்தப்படும் இடங்கள்!

ABOUT THE AUTHOR

...view details