சென்னை: நகர்ப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 50 மருத்துவப் பணியாளர்களை 11 மாதத்திற்குப் பணிக்கு எடுக்க மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
25 செவிலியர் (சம்பளம் - ரூ.14,000), ஐந்து ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் (சம்பளம் - ரூ.10,000), ஐந்து இயக்க அறை உதவியாளர்கள் (சம்பளம் - ரூ.8,400), ஐந்து கண் உதவியாளர்கள் (சம்பளம் - ரூ.12,000), ஒரு தொற்றுநோயியல் வல்லுநர் (சம்பளம் - ரூ.47,250), ஒரு கணக்கு அலுவலர் (சம்பளம் - ரூ.30,000), நான்கு கணக்கு உதவியாளர்கள் (சம்பளம் - ரூ.14,000), நான்கு தரவு நுழைவு ஆபரேட்டர்கள் (சம்பளம் - ரூ.10,350) என மொத்தமாக 50 பணி இடங்கள் நிரப்பப்படுகின்றன.