தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், சென்னையில் மட்டும் தினமும் கிட்டத்தட்ட ஆறாயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் இணைந்து பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல், மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் வார்டுக்கு இரண்டு அல்லது மூன்று என கிட்டதட்ட 400 மருத்துவ முகாம்கள் வரை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, கரோனா தடுப்புப் பணிக்காக ஒராண்டுக்கு தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி,
மாத ஊதியம் 60 ஆயிரத்தில் 115 மருத்துவ அலுவலர்கள்,
மாத ஊதியம் 15 ஆயிரத்தில் 189 செவிலியர்கள் பணிக்கான அறிவிப்பாணையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.