சென்னை: கரோனா தொற்று இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் அலை விரைவில் பாதிக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக, மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக, சென்னையில் இணை நோய் உள்ளவர்களைக் கண்டறிந்து முழுமையாகத் தடுப்பூசி செலுத்தி முடிக்கத் திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன.
சென்னையில் மட்டும் 6 லட்சம் இணைநோய் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டனர்
இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, சென்னை முழுவதும் 6 லட்சம் இணைநோய் உள்ளோர் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உட்பட 1.5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இணை நோய் உள்ள மீதமுள்ளவர்களுக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இணை நோய் உள்ளவர்கள் அதுகுறித்த தகவல்களை வீட்டிற்குச் சோதனை செய்ய வரும் தன்னார்வலர்களிடம் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும் எனவும்; தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுவரை சென்னை மாநகராட்சியில் ரூ.26.64 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'விமர்சனங்களை ஏற்காத அரசு அழிவைச் சந்திக்கும்'