சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும்வகையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய முயற்சி எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை விரைவாகத் தெரிந்துகொள்ளும் வகையில், இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன்மூலம் அடுத்தகட்ட சிகிச்சையை விரைவாக மேற்கொண்டு, உயிரிழப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை மாநகராட்சி தனது இணையதளத்தில் வெளியிட உள்ளது.
கரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சித் திட்டம் இதற்கு முன்னரே பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் விநியோகிப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க, சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 5ஆவது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கரோனா