தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காற்று தர அளவீட்டு கருவிகள் வைக்க மாநகராட்சி திட்டம்

காற்றின் தரத்தை அளவிடவும், பொது மக்களுக்கு மாசு அளவுகளை உடனுக்குடன் தெரியப்படுத்த சென்னை மாநகருக்குள்பட்ட ஐம்பது இடங்களில் காற்று தர அளவீட்டு கருவிகள் வைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

air quality measuring instruments
air quality measuring instruments

By

Published : Jul 29, 2021, 6:02 PM IST

சென்னை : வாகன நெரிசல்கள், தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளின் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்து வருகின்றன. காற்றின் நுண்துகள்கள் (சிலிக்கான்,மாங்கனீசு நிக்கல்) அளவும் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

சென்னையில் காற்றின் தர அளவீடு பி.எம் 2.5 அனுமதிக்கபட்ட அளவைவிட 1.1 முதல் 3.8 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சென்னையின் காற்று மாசினை கட்டுப்படுத்த புதிய செயல் திட்டங்களை வகுத்துள்ள சென்னை மாநகராட்சி, அதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

காற்றின் தரம் அளவீடு கருவி

எல்.இ.டி திரையுடன் கூடிய காற்றின் தரம் அளவீடு கருவி சென்னையில் உள்ள ஐம்பது இடங்களில் வைக்கப்படவுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகள் சிக்னல்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில் இந்த அளவீட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ளது.

எல்இடி திரையில் வெளியாகும்

இதன் மூலம் சுற்றுப்புற காற்றில் உள்ள ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு நுண் துகள்கள் போன்றவை கணக்கிடப்படுவதோடு அங்குள்ள எல்இடி திரையிலும் வெளியாகும். காற்றின் தரம், மாசு அளவுகளை பொதுமக்களும் நிகழ் நேரத்தில் தெரிந்துகொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்குள் பரிசோதனை

நகரின் எந்தெந்த இடங்களில் காற்று மாசு அதிகமாக உள்ளது என்பது கண்டறியப்பட்டு, அங்கு மாசு குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் வழிவகை செய்யப்படும் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். டெண்டர் விடப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தர அளவீட்டு கருவிகள் பொருத்தப்பட்டு பரிசோதனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழர் பண்பாட்டை கண்டால் வயிறு எரியுதா.. நல்லா எரியட்டும்!

ABOUT THE AUTHOR

...view details